தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Friday, September 24, 2010

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம்.

நான் சில தருணங்களை நினைக்கிறேன்.

என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான்.

"தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க"

இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க".

மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு.

மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு.

படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும்.

தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

10 மறுமொழிகள்:

றமேஸ்-Ramesh said...

நல்லது. பகிர்வுக்கு நன்றி. கடைப்பிடிக்கிறேன்.

அருண் பிரசாத் said...

good post.... அய்யோ, சாரி...

அய்யோ.... மண்ணிக்கனும், நல்ல பதிவு

பழமைபேசி said...

ஆமாங்க தம்பி!

Chitra said...

சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.... மற்றபடி, முடிந்த வரை முயல்கிறேன்.

ஹேமா said...

கார்த்திக்...நானும் கூடியளவு வேற்று மொழி வார்த்தைகள் கலக்காமலேதான் கதைத்து வருகிறேன்.என் இயல்பே இப்படித்தான்.

வானவன் யோகி said...

மொழிகள் பல பயில்வோம்..

பன்மொழிப்புலமை பெறுவோம்.

யாதும் ஊரே என உலகெங்கும் உலவுவோம்.

ஆயினும் நாமார்க்கும் குடியல்லோம் எனப் போராடி நம் தமிழ் வளர்க்கும் செந்தமிழ் பேரினம்.

எம் தமிழர் நீவிர்.. உமது கருத்தே..ஆயினும் எம்மனைவரின்...உளப்பாங்கு உமது வாக்கு..

வாழ்க..வெல்க..உம்மைப் போன்றோரால் இறும்பூதெய்துகிறோம்....

சே.குமார் said...

நல்லது. பகிர்வுக்கு நன்றி

ம.தி.சுதா said...

நல்ல பகிர்வு தமிழ் தான் எங்கள் மூச்சு... ஏனெனில் தமிழனுக்கு சொந்தமாயிருப்பது தமிழ் மட்டும் தான்...

அப்பாவி தங்கமணி said...

உண்மைதாங்க கார்த்திக் சில சமயம் ஆங்கிலம் கலக்காம பேசணும்னு உறுதி எடுத்துகிட்டாலும் முடியறதில்ல... இது வருத்தத்திற்கு உரியது தான்... நல்ல பதிவு

பிரசன்னா said...

நிச்சயம் முயற்சி பண்ணுவோம் :)

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை