Skip to main content

Posts

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...
Recent posts

புத்தர் தமிழர் சிங்களர் - VI

முதன் முதலில் தீபவம்சம் என்கிற நூல் தான் சிங்கள இனம் பற்றிய வரலாற்றை பதிந்தது. வரலாறு என்பது பல விபத்துகளை சந்திப்பது.  உண்மையின் பலவீனம் அது திரிக்கபடுவது, மறைக்கபடுவது, மறக்கடிக்கபடுவது என்று மகாத்மா காந்தி சந்தை ஞாபகம்.  இந்த தீவின் வம்சம் நாங்கள் என்பதை சொல்ல நினைத்தது தீபவம்சம். எல்லா இனங்களும் தங்களின் பெருமைகளை சொல்லவே முற்படும். ஆனால் பல இனங்கள் இவற்றை ஒற்றை நூலில் சாதிப்பது இல்லை. புத்தம் மற்றும் கிருத்துவம் ஆகியவை ஒற்றை புத்தகத்தில் நிறைய வரலாற்றை அல்லது புராணத்தை ஒரு புதினத்தை போல அல்லது ஒரு தொகுக்கப்பட்ட பதிவை போல வழங்க விளையும். இது அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வழி அமைத்து தரும். இந்த உக்தி பாராட்ட தக்கது. இதில் நிறைய லாபங்கள் உண்டு. ஆனால் தீபவம்சம் - ஒரு சமய புத்தகம் அல்ல. தீபவம்சம் தான் முதன் முதலில் மண்ணின் மைந்தர்கள் பற்றியும் வந்து குடி அமர்ந்தவர்கள் பற்றியும் சொல்கிறது.  குடி அமர்ந்த சிங்களர்கள் உயர்ந்தவர்கள் என்கிறது. இங்கேதான் சிங்கள வரலாறு கொஞ்சம் நாடக தன்மை கொள்கிறது. சிங்களம் என்கிற மொழியும் சிங்களம் என்கிற இனமும் பின்னால் உருவானவை. ...

புத்தர் தமிழர் சிங்களர் - V

சிங்களர்கள் என்று ஒரு மொழி இனம் உருவாக வேண்டிய நிலையை சங்க மித்திறரின் வரவோடுதான் பார்க்க வேண்டும். தேவனை நம்பிய(து) ஈசன் ( நம்பி ஈசன் என்கிற குடும்ப பெயர் இன்றும்  கேரளா மண்ணில் உள்ளது) என்கிற தமிழ் அரசரின் இதயத்தில் புத்த ஆட்சி என்கிற கருத்து இயல் விதைக்க பட்டது சங்க மித்திறரின் வரவில்தான். புத்தரின் பல்லையும் போதி மரத்தையும் காக்க அப்படி ஒரு நிலைப்பாடு தேவை என்கிற நிலைப்பாடு அப்போது சங்கமித்ரருக்கு தோன்றி இருக்க வேண்டும். மூத்த சிவன் வழி வந்தவர்கள் புத்த ஆட்சியை நிறுவ முனைந்தனர். சின்ஹலம் இந்த தருணத்தில் எங்கே இருந்தது என்கிற கேள்வி எனக்கு இன்னும் உண்டு. பாலி, வடமொழி மற்றும் தமிழின் அடிப்படையில் ஒரு மொழி உருவாக்கம் நிகழ்ந்தது. அதுவே சின்ஹலம் ஆனது. இன்று பெருமையோடு பேசப்படும் சில சிங்கள கருத்து இயல்கள் சிங்களமே இல்லை என்பது சில சிங்கள ஆய்வாளர்களின் கருத்தும். ராவணனின் வழி வந்தவர்களும் - கும்ப கர்ணனின் வழி வந்தவர்களும் என்று பெருமை பகன்றவர்கள் பலர் சிங்களர் ஆகினர். சிங்க கோடி என்பது கும்ப கர்ணனின் கோடி என்றும் சில கருத்துகள் உண்டு. சிங்கள மொழியின் உருவாக்கம...

புத்தர் தமிழர் சிங்களர் IV

காஞ்சி புத்தத்தின்  தலை நகரை இருந்த நாட்கள் இன்னும் எச்சங்களாய் உள்ளது. இன்றும் காஞ்சிக்கு அருகில் இருக்கும் திருத்தலங்கள் சிலவற்றில் ஒரு ஒழுக்கம் கடைபிடிக்க படுகிறது.  அது ஆலயங்களில் பலி கொடுக்காமை. இந்த ஆலயங்கள் இந்து ஆலயங்களை இருந்தாலும் இவை காலத்தால் முந்தய புத்த ஆலயங்களே என்று சொல்கிறார்கள். அசோகர் காஞ்சியில் புத்த அடையாளங்கள் நிறுவி இருக்கலாம்.  நாகர்களுக்கும் புத்ததிர்க்கும் இருக்கும் தொடர்பு. தமிழுக்கும் புத்ததிருக்குமான தொடர்பை நிறையவே சொல்லும். புத்தர் மூன்று முறை  இலங்கை வந்ததாகவும் அதில் இரண்டு முறை நாகர்களின் நலனுக்கே வந்ததாகவும் இலங்கையின் வரலாறு பதிகிறது. புத்தர் நாகர்களில் ( தமிழர்களில் ) பிரச்சனையில் ஈடுபட்ட இரண்டு தரப்பை அவர் அழைத்த தருணத்திலேயே அவர்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டனர் . இயக்கர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை. அவர்களின் பிரச்சனைகளுக்கும் புத்தர் தீர்வு வழங்கி உள்ளார்.  இலங்கையை புத்தர் மூன்று முறை இலங்கை வந்து இருந்தால் அவர் தமிழ் மண்ணின் வழியாகவே பயணித்து இருக்க வேண்டும். புத்தர் எந்த நிலையிலும் வின் வழி பயணம் மேற்கொண...

புத்தர் தமிழர் சிங்களர் - III

புத்தர் அவர்களின் பயணம் பற்றிய ஆய்வு நிறைய கதவுகளை திறக்கலாம். தமிழ் மண்ணில் வசித்த புத்த கோஷர் என்கிற புத்த துறவி பிறந்து பின் இலங்கை வந்து நிறையவே புத்தம் படித்தார் என்பது நம்பபடும் வரலாறு. புத்த மதம் சார்ந்த தமிழ் மனிதர்கள் பற்றி பேசும் போது அவர்களின் இயற் பெயர்கள் நமக்கு கிடைக்காதது சற்று வருத்தம் தரும் செய்தியே. ஆய்வுகள் பெரிதும் இந்த விடயத்தில் சரியான முடிவுகள் தர தவறி  உள்ளன. பிரசன்னா தரரின் மாணவராக இருந்து சீன மக்களுக்கு சஹோளின் புத்த மதத்தை சொல்லி கொடுத்த போதி தர்மரின் இயற் பெயர் - புத்தி தார பல்லவர் என்றும் அவரது தாதனார் பெயர் சிமவர்ம பல்லவன் என்பதும் இன்னும் குழப்பத்தில் உள்ள பெயர்களாகவே உள்ளன. தமிழ் மண் தான் ஆரம்ப காலத்தில் புத்தம் செழிக்க நிறைய உதவி உள்ளது. தமிழ் மன்னர்கள் எம் நண்பர்கள் என்று அசோகரின் கல்வெட்டு சொல்கிறது. இந்த கல்வெட்டுகளின் வாயிலாக ஆய்வு செய்யலாம். புத்தர் காஞ்சியிலும் சென்னையில் எழும்பூரிலும் தங்கி இருந்து இருக்கலாம். தென்னாட்டின் கயா என்று சொல்லப்பட்டது சென்னையே. தன் பயணத்தின் பொழுது அவர் திருச்சி மற்றும் தஞ்சையிலும் தங்கி இருந்து இருக...

புத்தர் - தமிழர் - சிங்களர் - II

தமிழ் மற்றும் பாலி பற்றி பேசுகையில் எனக்கு நினைவில் வரும் ஒன்று மேக  சந்தேசதில் வரும்  ஒரு காட்சி. "அய்யா உத்தா" - என்று ஒரு வார்த்தை. அதாவது ஐயாவின் ரத்தம்.  இதை ஆர்ய புத்திரன் என்று வடமொழி பொருள் சொல்லும். ( ஆதாரம் : ஆரிய மாயையா ? திராவிட மாயையா ? - பி ராமமூர்த்தி என்று நினைவு ) புத்தம் என்பது ஒரு வகையில் ஒரு வாழும் வழி சொல்ல வந்த இயக்கம். புத்தம் என்பது தமிழ் மன்னர்களின் சைவ நெறி பரப்பல் காலத்திலும் அரச ஆதரவு பெற்றே வந்தது.  புத்த மடாலயம் ஒன்று சாவக தீவின் அரசனால் நாகபட்டினத்தில் கட்டப்பட்டது  - ராஜராஜ சோழனின் அனுமதியின் பெயரால். சமண கோயில் ஒன்றை ராஜராஜ சோழனின் சகோதரி கட்டியுள்ளார். புத்தம் மதத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் பல்லவர்களுக்கு நிறைய உண்டு. சிம்ஹா வர்மா பல்லவன் என்கிற பல்லவன் ஒருவனின் பேரனோ என்று போதி தர்மர்  என்று என்னவும் வழி  உண்டு. முதன் முதலில் புத்தம் சார்ந்த மத சின்னங்கள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. தமிழ் கடவுள் முருகனின் திரு ஆலயமாக புத்த மதத்தினர் நிறுவிய க...

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது எ...