Skip to main content

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல.
url
ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ?

இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட்.எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம்.

“என்னங்க புள்ளைக்கு ‘ஷு’-ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள்.
நம்ம யோகராஜன் பரிந்துரை!
‘தமிழ்ல ஷு இல்லடி’ – நான் சொன்னவுடன் எரிக்கிற மாதிரி பார்த்தாள். கொலையும் செய்வாள் பத்தினி.
“சொல்றத செயுங்கள்” – கட்டளையிட்டாள்.
பேரு தேடனும் அதுவும் ‘ஷு’ ல தேடனும்.

அலுவலகத்தில் என் மேஜையில் ஸ்வீட் வைத்து இருந்தேன் .வாழ்த்து சொன்னார்கள் சக பணியாளர்கள். பக்கத்துக்கு இருக்கை பரமசிவந்தான் நான் நினைத்த கேள்வியை கேட்டான்.
“என்ன பேரு வைக்க போறீங்க?”
“பரமா, ஷூ-ல ஆரம்பிகனுமாம்”
“நல்லதா போச்சு. செருப்புன்னு வையுன்னு சொல்லாம. சரி! யாரு சொன்னது?”
“நம்ம யோகராஜாதான்”
“ஜோதிட சிகாமணி, நியுமரலாஜி நாகபோஷினியா ?. அப்ப வச்சிடுப்பா”

ஒண்ணுமே புரியல. ஆண் பிள்ளை பிறந்தா, தாத்தா பேரு, பெண் பிள்ளை பிறந்தா பாட்டி பேருன்னு – தமிழ் நாடு நல்லாதானே இருந்துச்சு. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை? ஷூ-ல பேராம்? இது என்ன லேசுபட்ட காரியமா ?

மீண்டும் இரவு படுக்கையில் ரேவதி வந்து அமர்ந்தாள். இப்ப எல்லாம் எனக்கு வீட்டுக்கு வரவே பயமா இருக்கு. அதுவும் ரேவதி வந்து பேச ஆரம்பிச்சா.. பயத்துல வயுத்துக்குள்ள என்ன என்னமோ பண்ணுது.

ரேவதியின் கையில் ஒரு பேப்பர். அதில் நூறு பேரு.
“என்னங்க இந்த பேரு எப்படி இருக்கு?” – ரேவதி கேட்டாள்.
“என்ன பேரு ?”
“ஷுர்ஜித்”
“என்னடி பஞ்சாப் சிங் பேரு மாதிரி இருக்கு?”
“ஓ! இது எப்படி இருக்கு .. ஷுக்மோகன் ஷால்மியா?”
“ஐயோ விடு ரேவதி. நானும் பேரு தேடுறேன்?”
“சீக்கிரம்” – கட்டளையோடு கிளம்பினாள். நாள்ளதனே இருந்தா ?

ஒரு ஷுமினதனோ, ஷுநிலோ, ஷுந்தரஜனோ வீட்ல உருவானா ஆச்சரிய படவேண்டாம்.

ரெண்டு நாளா விடுப்பில் இருந்த அக்கோண்டன்ட் அன்றுதான் வந்தார், கடுப்பில் இருந்த என்னை பார்த்தார்.

“யோகராஜன் பேச்ச விளையாட்டா எடுத்துக்கலாமா ? ‘ஷு’ல இன்னமா பேர் வைக்கல?”
“ஒன்னும் சிக்கல சார்” – இது நான்.
“புள்ளைக்கு நோய் கியி பிடிச்சிடாம இருக்கனும்னா ... சீக்கிரம் பேரு வை”
என்ன கொடுமைட இது? ஊருல இருக்கிறவன் எல்லாம் சாபம் தர்றான்.

அவரே மீண்டும் ஆரம்பிச்சாரு.
“என் பொண்ணு பேரு அஹானா. அதுல ‘ஹா’நாவ எடுத்தப்புறம் இப்ப கிளாஸ்லையே அவதான் முதல்ல வர்றா...”
“இப்ப உங்க பொண்ணு பேரு ‘ ஆ’ வா?” – இது நான்
“இல்ல ஆனா”
“அதுதான் நானும் சொன்னேன்” – என்று நான் சொன்னவுடன். என்னை முறைத்துவிட்டி போய்விட்டார். அவர் பிள்ளைக்கு ஆனா உபயம் நம்ம யோகராஜன். அது இப்பதான் யு கே ஜி படிக்குது. அதுல அது நூத்துக்கு தொன்னுத்தி அஞ்சு எடுக்குமாம் ... இப்ப நூறு எடுக்குதாம். அதுல அது நூறு எடுத்தா என்ன தொண்ணுறு எடுத்தா என்ன?

“சார்! நேம்சொநேம்ஸ்.காம்ல தேடுங்க” – புது டைபிஸ்ட் சுஷீலா சொன்னங்க. யோகரசனால் கிடைத்த ஒரு நன்மை அவன் வேலையைவிட்டு போனப்புறம் அவன் சீட்டுக்கு ஒரு அழகான பொண்ணு வந்ததுதான்.
ஷு...ஷு... கோடி பேரு கொட்டுது. நேம்சொநேம்ஸ்.காம் ஒரு நேம் பரிந்துரிக்கும் இணையத்தளம். இப்ப எல்லாத்துக்கும் இண்டர்நேட்டுதான்.


ஷுந்தமில ஸாரி செந்தமிழல்ல பெருவைக்க நேச்ச என்ன இந்த ஷுவாலையே அடிச்சுக்கணும்.

ஒரு பேர நானும் ரேவதியும் தேர்ந்து எடுத்தோம். “ஷுக்ரேக் சேப்பல்” – இவரு ஒரு ரிக் வேதகால பூர்வகுடி வீரராம். சேப்பல் என்பது இவர் வம்சமாம். அதனால அத வைக்கனும்னு அவசியம் இல்லையாம் – ரேவதி சொல்லிவிட்டாள். ஷுக்ரேக் என்றால் சிறந்த வீரன்னு அந்த கால பூர்வகுடி மொழில அர்த்தமாம்.

ஊரெல்லாம் டமாரம் அடித்துவிட்டோம். ஷுக்ரேகின் பேர் சூட்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடிநோம்.

காலங்கள் ஓடியது.

ஒருநாள் ஷுக்ரேகை கூப்பிடும்போது வேறு ஒரு ஆசாமியும் திரும்பி பார்த்தார்.

ஒரு வேலை அவர் பெரும் ஷுக்றேகோ ?
அவர் அருகில் வந்தார்.

“இந்த பேரு உங்களுக்கு எப்படி தெரியும்” – நான் என் டமாரத்தை அடித்தேன். நதி மூலம் ரிஷி மூலம் எல்லாம் சொன்னேன். பொறுமையாய் கேட்ட நண்பர் – கொஞ்சம் வாடிய முகத்துடன் பேச ஆரம்பித்தார்.

“இப்படி நடக்கும்னு தெரியாது சார். நான் தான் ஒரு நாள் தண்ணி அடிச்சுட்டு ... நேம்சொநேம்ஸ்.காம்ல contribute பட்டன அழுத்தி ஷுக்ரேக்-நு ஒரு பேர எழுதி அதுக்கு ஒரு கதையும் எழுத்தி வச்சேன்”

தலையில் கையை வைத்து அமர்ந்து கொடேன். அப்புறம் விக்கிபீடியாவில் நான் போயி ஷுக்ரேக் பத்தி ஒரு பக்கம் போட்டேன். ஷுக்ரேக் ஒரு சிறந்த வீரர் அவர் சேப்பல் வம்சத்தவர். சேப்பல் வமசதவர்கள் ஒரு காலத்தில் உலகத்தையே ஆண்டவர்கள் என்று.

காலம் உருண்டு ஓடி விட்டது. இப்ப ஷுக்ரேக் பாட்டு எழுதுறான் சினிமால.

இந்த வருடம் தேசிய விருது வாங்கி இருக்கும் ஜீவன்-தான் அவன். ஜீவன் என்கிற புனைபெயரில் எழுதிகிறேன். எல்லோரும் இப்போது அவனை ஜீவன் என்றுதான் அழிகிறார்கள். இப்பதான் அவன் பெயரில் ஜீவன் இருக்கிறது.

நல்லவேலயாய் அவன் புனை பேருக்கு ஜோசியர்களை தேடவில்லை.

பெயரிலும் ஜீவன் வேண்டும்!

Comments

  1. கதையிலும் ஒரு ஜீவன் இருக்கிறது. :-) ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்