அரசியல் இப்போதெல்லாம் புரிவதற்கு கடினமாக இல்லை. செய்தியை படிக்கிறவன் அதன் உள்ளர்த்தத்தை சீக்கிரம் கண்டுபிடித்து விடுகிறான். மக்கள் தெளிவாகவே உள்ளனர் அனால் தெளிவான முடிவை எடுக்க அவர்களின் நேர்மை தடுக்கிறது. (நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் ஆனால் பணம் வாங்கியாச்சு; கொடுத்த வாக்க காப்பாத்தனும் இல்லையா ?) தமிழ் நாட்டில் இப்போது குட்டை குழம்பி உள்ளது. காங்கிரஸ் கொஞ்சம் முன்னதாக முடிவு செய்து இருந்தால் நிறையவே விளையாடி இருக்கலாம். இப்போதும் விளையாடி உள்ளார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பெரிதாக எதுவும் சாத்தித மாதிரி எனக்கு தென்படவில்லை. தில்லி ஒரு விதிவிலக்கு. தற்போதைய ஆட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது மன்மோகன் சிங்கக்கு தெரியும். அவருக்கு அதிகாரம் என்ன என்பது உங்களுக்கு தெரியும். காங்கிரஸ் உண்மையில் தமிழ் நாட்டில் வளர நினைத்தால் தமிழர்களை பற்றிய சிந்தனை அதிகம் அவர்களிடம் வளர வேண்டும். மக்களாட்சி என்பது என்ன என்பதே தெரியாமல் நம்மில் பலர் உள்ளோம். இது தேர்தலை பாதிக்காது என்று ஊழல்கள் பற்றி சொல்லும் போது நாம் ரொம்ப நல்லவர்கள் என்பது தெரிகிறது. ...