தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Sunday, November 21, 2010

வெற்றி பெற்றவர்கள்

அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்று ஒருமிகப்பெரிய பட்டியல் இப்போது எல்லாம் தொலைக்காட்சிகளில் குற்றவாளிகள் என்று பெரிது படுத்தபடுகிறது.

உண்மையில் நடந்திருப்பது வேதனைக்கு உரிய சுரண்டல். எதை தொட்டாலும் ஊழல் லஞ்சம் என்பது மக்களாட்சியின் இருத்தயம் வெந்து கொண்டு வருவதையே காண்பிக்கிறது.

மன்னன் எவ்வழி மக்கள் எவ்வழி என்பது அரசர்கள் கால நடைமுறையாக இருக்கலாம். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடைமுறைபடுத்தப்படுவதே மக்களாட்சியாக இருக்க வேண்டும்.

நடைபெறும் நிகழ்வுகளில் மனம் வருத்தப்பட்டேன். பின்னர் சிலரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன். உலகில் வெற்றி பெற்றவர்கள் அல்லது இந்தியாவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - என்பதே அந்த கேள்வி.

யாரும் எந்த ஒரு போராளியின் பெயரையோ , மனித நேயரின் பெயரையோ  அறிவியல் மனிதரின் பெயரையோ , ஏன் மதபோதகர்கள் பெயரையோ சொல்லவில்லை. எல்லோரும் பணம் படைத்தவர்களின் பெயரையே சொல்லினர். போராளிகள் உருவாவது கட்டாயத்தின் அடிப்படையிலும் பணக்காரர்கள் உருவாவது தன் முனைப்பு ஆசையிலும் என்பதே நான் புரிந்து கொண்டது.

வெற்றியின் அளவுகோல் பணம் என்று ஆகிவிட்டது. இன்னும் இம்மாதிரியான ஊளைகள் நிறைய வரும். காரணம் பணம்தான் வெற்றியின் அடையாளம். மாட்டிக்கொள்ளாமல்  தவறு செய்வது புத்திசாலித்தனம்.

நிறைய ஊழல்களை எதிர்பாருங்கள் இல்லாவிட்டால் பிள்ளைகளுக்கு வெற்றியின் அளவுகோலை மாற்றி கற்பியுங்கள்.

5 மறுமொழிகள்:

அருண் பிரசாத் said...

welcome back karthik

ஹேமா said...

கார்த்திக்....நிறைய நாள் ஆச்சு.சுகம்தானே !

அதைத்தானே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நாய் தின்னாக் காசுன்னு...ஆனா அதுக்கு
இருக்கும் மதிப்பு !

Karthick Chidambaram said...

சுகம் ஹேமா அக்கா

Karthick Chidambaram said...

Thanks Arun Prasad

வானவன் யோகி said...

பணம் இல்லாத அறிவாளி ஒருவன் இதுபோன்ற பணம் படைத்த அறிவிலிகளிடம் படும் பாடு நாயும் கூட தேவலாம்.

நீண்ட இடைவெளி....அடிக்கடி சுவாரசியமாக ஏதேனும் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

ம்ற்றபடி நலம்தானே...வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை