பல நாட்களுக்கு முன்பு நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார். பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன். பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள். புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர்...