தமிழ் மற்றும் பாலி பற்றி பேசுகையில் எனக்கு நினைவில் வரும் ஒன்று மேக சந்தேசதில் வரும் ஒரு காட்சி. "அய்யா உத்தா" - என்று ஒரு வார்த்தை. அதாவது ஐயாவின் ரத்தம். இதை ஆர்ய புத்திரன் என்று வடமொழி பொருள் சொல்லும். ( ஆதாரம் : ஆரிய மாயையா ? திராவிட மாயையா ? - பி ராமமூர்த்தி என்று நினைவு ) புத்தம் என்பது ஒரு வகையில் ஒரு வாழும் வழி சொல்ல வந்த இயக்கம். புத்தம் என்பது தமிழ் மன்னர்களின் சைவ நெறி பரப்பல் காலத்திலும் அரச ஆதரவு பெற்றே வந்தது. புத்த மடாலயம் ஒன்று சாவக தீவின் அரசனால் நாகபட்டினத்தில் கட்டப்பட்டது - ராஜராஜ சோழனின் அனுமதியின் பெயரால். சமண கோயில் ஒன்றை ராஜராஜ சோழனின் சகோதரி கட்டியுள்ளார். புத்தம் மதத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் பல்லவர்களுக்கு நிறைய உண்டு. சிம்ஹா வர்மா பல்லவன் என்கிற பல்லவன் ஒருவனின் பேரனோ என்று போதி தர்மர் என்று என்னவும் வழி உண்டு. முதன் முதலில் புத்தம் சார்ந்த மத சின்னங்கள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. தமிழ் கடவுள் முருகனின் திரு ஆலயமாக புத்த மதத்தினர் நிறுவிய க...